• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லவ் மேரேஜ் படத்தின் மீண்டும் பிறந்தேனோ வீடியோ பாடல் வெளியீடு..!

சினிமா

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'லவ் மேரேஜ்'. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.

திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஜூன் 27ஆம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்தது. படத்திற்கு தணிக்கை குழு "யு" சான்றிதழை வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 6 நிமிடங்களாகும்.

வருகிற 27ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இன்று படக்குழு "மீண்டும் பிறந்தேனோ" வீடியோ பாடலை வெளியிட்டுள்ளது. மியூசிக் அமைத்துள்ளத ஷான் ரோல்டன்தான் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
 

Leave a Reply