• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தி மொழியில் கூலி படத்தின் தலைப்பு மாற்றம்

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமிர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் மற்றும் "சிக்கிடு" வைப் பாடலின் ப்ரோமோ வீடியோ என அனைத்தும் இணையத்தில் வைரலானது. சிக்கிடு வைப் பாடல் நாளை மாலை வெளியாகா இருக்கிறது.

இந்நிலையில் கூலி திரைப்படத்தை இந்தி மொழியில் மஜாதூர் என தலைப்பு வைத்துள்ளனர். ஏனெனில் இந்தி மொழியில் ஏற்கனவே 1983 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியானது மேலும் வருண் தவான் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு கூலி நம்பர் 1 என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply