இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியர்களுக்கு பயண எச்சரிக்கை
இலங்கை
இலங்கைக்கு பயணம் செய்யும் அவுஸ்திரேலியா நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கைகை புதுப்பித்துள்ளது.
இதன்படி, இலங்கை செல்லும் அவுஸ்திரேலியர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில், இலங்கைக்கான பயண ஆலோசனையை மதிப்பாய்வு செய்ததாகவும், அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்துவதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.





















