• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தது என்னுடைய முதல் தவறு - தில் ராஜு

சினிமா

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

சில வாரங்களுக்கு முன் நடந்த நேர்காணல் ஒன்றில் கேம் சேஞ்சர் படத்தின் படத்தொகுப்பாளரான ஷமீர் முகமத் படத்தில் வேலைப்பார்த்த அனுபவம் மிகவும் மோசமானது என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " நான் இதுவரை 60 திரைப்படங்கள் தயாரித்துள்ளேன் ஆனால் எந்த ஒரு திரைப்படமும் பெரிய இயக்குநர்களுடன் வேலைப் பார்த்தது இல்லை. கேம் சேஞ்சர் திரைப்படம் நான் செய்த தவறான முடிவு. நான் படப்பிடிப்பிற்கு முன்பே காண்டிரக்டில் சில விஷயங்களை சேர்த்திருக்க வேண்டும் அதை செய்யாதது என்னுடைய தவறு. ஒரு தவறு நடக்கும் போது அதை தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு தயாரிப்பாளரின் பொறுப்பு ஆனால் நான் அதை செய்ய தவறிவிட்டேன். இதன் பிறகு அப்படி ஒரு திரைப்படத்தை தயாரிக்க மாட்டேன்." என கூறியுள்ளார்.

Leave a Reply