பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இலங்கை
பிலிப்பைன்ஸ் தீவுகளுக்கு கிழக்கே அந் நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 01:58 GMT மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி 7.97 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 129.83 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில், 10 கிலோ மீட்டர் ஆழம் குறைவாக இருந்தது.
நிலநடுக்கத்தினால் உண்டான சேத விபரங்கள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.























