• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும் - ஈரான் உச்சபட்ச தலைவர்

இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி தளங்களும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும் என்று ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய பின் முதல் முறையாக கருத்து கூறியுள்ள ஈரானின் உச்சபட்ச தலைவர், எந்த இடத்திலும் அமெரிக்காவைப் பற்றியோ, அதன் தாக்குதலை பற்றியோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply