• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்த கதாப்பாத்திரத்தை தனுஷை தவிர வேறுயாராலும் நடித்திருக்க முடியாது - சிரஞ்சீவி பாராட்டு

சினிமா

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

படத்தின் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் வெற்றிவிழா நேற்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்துக்கொண்டார். விழாவில் நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டி சிரஞ்சீவி பேசினார். அதில் அவர் " இந்த படத்தில் தீபக் என்ற கதாப்பாத்திரத்தை தனுஷை தவிர வேறுயாராலும் செய்திருக்க முடியாது. அவர் பிச்சைக்காரராக வரும் சீனில் அவரை என்னால் தனுஷாக பார்க்க முடியவில்லை அந்த கதாப்பாத்திரமாகவே மாறிவிட்டார். இதன் மூலம் இந்த கதாப்பாத்திரத்திற்காக எவ்வளவு டெடிகேஷனோடு வேலைப்பார்த்து இருக்கிறார் என்று தெரிகிறது" என பாராட்டி பேசினார்.
 

Leave a Reply