அக்மீமன பகுதியில் துப்பாக்கி சூடு
இலங்கை
காலி, அக்மீமன பகுதியில் இன்று (23) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அக்மீமன பகுதியின் வெவேகொடவத்தை, திசாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீதே இன்று அதிகாலை 05.00 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூடு குறித்து காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
























