மட்டக்களப்பில் வீட்டின் முன் நிறுத்பட்ட வான் தீப்பற்றியெரிந்ததால் பரபரப்பு
இலங்கை
மட்டக்களப்பு நகரில் பாடு மீன் வீதியிள்ள வீடு ஒன்றின் முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வான் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்துள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைக்கும் படையினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதும் , வான் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.























