• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம்

அமெரிக்க ராணுவம் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை), ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது" என தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என நேற்று பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Reply