• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் 3 வயது சிறுவன் பலி

கனடா

கனடாவின் நோவா ஸ்கோஷியாவின் பெட்ஃபோர்ட் பகுதியிலுள்ள ப்ரௌன்ஸ்டோன் வேயில் (Brownstone Way) சாலையை கடக்க முயன்ற 3 வயது சிறுவன், காரொன்றில் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 7:50 மணியளவில் நடந்ததாக ஹலிபேக்ஸ் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் சாலையை கடந்தபோது வாகனமொன்று அவரை மோதியுள்ளது.

உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டாலும், பலத்த காயங்கள் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த துயரமான நேரத்தில் சிறுவனின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்,” என ஹலிபேக்ஸ் பிராந்திய பொலிஸார் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

Leave a Reply