• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சித்தார்த் நடித்த 3 BHK படத்தின் `இடி மழை' பாடல் வெளியீடு

சினிமா

சித்தார்த் 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

படத்தின் இரண்டாம் பாடலான இடி மழை பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளார்.
 

Leave a Reply