குபேரா படத்தின் BTS புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்தார் ராஷ்மிகா
சினிமா
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது..
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா குபேரா படத்தின் BTS புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.






















