விளையாட்டு நமக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும் - அமீர் கான் படத்தை பாராட்டி பேசிய சச்சின்
சினிமா
அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். படத்தை அமீர் கான் தயாரித்துள்ளார். இப்படத்தில் அமீர் கானுடன் ஜெனிலியாவும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அமீர் கானின் சித்தாரே ஜமீன் பர் படத்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டி பேசி வீடியோ வெளியியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், சித்தாரே ஜமீன் பர் மிகவும் நல்ல படம். இப்படம் உங்களை சிரிக்கவும் வைக்கும் அழவும் வைக்கும். விளையாட்டு நமக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும் சக்தி கொண்டது என்று நான் எப்போதும் கூறி வருகிறேன்" என்று பேசினார்






















