நைஜரில் ஆயுத கும்பல் தாக்கியதில் 34 ராணுவ வீரர்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்பிறகு ஆயுத கும்பலின் தாக்குதல் பல மடங்கு அதிகரித்தது.
குறிப்பாக, குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அப்பாவி மக்களையும் அவர்கள் தாக்குகின்றனர். எனவே ஆயுத கும்பலைக் கட்டுப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள பானிபாங்கோ நகரில் ராணுவ வீரர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது ஆயுத கும்பலைச் சேர்ந்தவர்கள் 200 மோட்டார் சைக்கிளில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 34 ராணுவ வீரர்கள் பலியாகினர். படுகாயம் அடைந்த 14 வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.





















