ஈரானை சூழ்ந்த 60 இஸ்ரேலிய போர் விமானங்கள் - அணுசக்தி நிலையம், ஆயுத உற்பத்தி தளங்கள் மீது தாக்குதல்
ஈரான் இஸ்ரேல் மோதல் நேற்றுடன் ஒரு வாரத்தை எட்டியது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ஈரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) கூற்றுப்படி, 60க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் சுமார் 120 சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தெஹ்ரானுக்கு அருகிலுள்ள பல ஏவுகணை உற்பத்தி தளங்கள் குறிவைக்கப்பட்டன. ஏவுகணை பாகங்கள் மற்றும் ராக்கெட் என்ஜின்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் உற்பத்தி தளங்கள் குறிவைக்கப்பட்டன.
குறிப்பாக, ஈரானின் அணுசக்தி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் தெஹ்ரானின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (SPND) தலைமையகத்தின் மீது குண்டுவீச்சு நடத்தி அதை வெற்றிகரமாக அழித்ததாக இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் பலர் பேர் கொல்லப்பட்டதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் இராணுவத் திறனுக்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் SPND முக்கிய பங்கு வகிக்கிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தின் சிற்பியாக அறியப்படும் ஃபக்ரிஸாதே 2011 இல் SPND அமைப்பை நிறுவினார்.
இதற்கிடையே ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்படாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
ஈரானின் இராணுவத் திறனுக்குத் தேவையான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எஸ்பிஎன்டி முக்கிய பங்கு வகிக்கிறது.























