பாபா படத்தினால் அழிந்தேன். அது வெறும் தோல்வி அல்ல, மிகப்பெரிய Disaster- மனம் திறந்த மனிஷா கொய்ராலா
சினிமா
1989-ம் ஆண்டு, நேபாள திரைப்படமான 'பெரி பேதௌலா' மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார் மனிஷா கொய்ராலா. பின்னர், 1991-ல் சுபாஷ் கய் இயக்கத்தில் வெளியான 'சௌதாகர்' திரைப்படம் மூலம் அவர் பாலிவுட்டில் அறிமுகமானார்.
தொடர்ந்து, 1995-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பம்பாய்' திரைப்படம் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, தொடர்ந்து, இந்தியன், ஆளவந்தான், முதல்வன், பாபா என கமல், ரஜினி வரை ஜோடி போட்டு, புகழின் உச்சிக்கு சென்றார் மனிஷா கொய்ராலா.
பின்னர் ஒரு கட்டத்தில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் ரஜினியுடன் நடித்த பாபா படத்தை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " நான் நடித்த கடைசி பெரிய தமிழ் திரைப்படம் பாபா. அந்த காலத்தில் அப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. இதனால் என் தென்னிந்திய திரைப்பயணம் முடிவடைந்து விடும் என நினைத்தேன் அதேப்போல் நடந்தது. பாபா திரைப்படம் அது தோல்வி மட்டுமல்ல, மிகப்பெரும் டிசாஸ்டராக அமைந்தது. அதன் பிறகு தென் இந்திய பட வாய்ப்புகள் வர குறைய தொடங்கியது".
கடந்த ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ஹீராமண்டி வெப் தொடரில் மனிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இத்தொடர் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.























