யுவன் பாடிய பறந்து போ பட பாடல் ரிலீஸ் அப்டேட்
சினிமா
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பாடலான சன்ஃப்ளவர் மற்றும் டேடி ரொம்ப பாவம் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான கஷ்டம் வந்தா பாடல் வரும் ஜூன் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






















