• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புஷ்பா 2 வசனத்தினால் ஆந்திரா அரசியலில் சலசலப்பு

சினிமா

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தில் ரப்பா ரப்பா நறுகுதம் என்ற வசனம் மிகவும் பிரபலமானது.

இந்த வசனத்தினால் தற்பொழுது ஆந்திரா அரசவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் முதலமைச்சரின் பொதுக்குழு சந்திப்பில் தொண்டர் ஒருவர் புஷ்பா 2 வசனத்தில் இடம்ப்பெற்ற ரப்பா ரப்பா நறுகுதம் என்ற பெயர் பதாகையை ஏந்தியபடி இருந்தார். இந்த வசனத்திற்கு ஒரு ஒரு தலையாக வெட்டப்படும் என்ற அர்த்தமாகும்.

இந்த பெயர் பலகை ஏதிய தொண்டரை காவல் அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ரெட்டி பதிலளித்துள்ளார். அதில் அவர் ' புஷ்பா வசனத்தை சொல்ல கூட இந்த நாட்டில் சுதந்திரம் இல்லையா, புஷ்பா வசனம் கூறினால் தப்பு, புஷ்பா போல் செய்கை காட்டினால் தப்பு, இது என்ன நியாயம், எங்கு சுதந்திரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு நாயுடு "அவர்கள் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள்," என்றும்

நாயுடுவின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான நாரா லோகேஷும் திரு. ரெட்டியை கடுமையாக சாடி, அவரது "மனப்பான்மை ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது" என்றார்.

"நீங்கள் அவர்களை ஆடுகளைப் போல படுகொலை செய்வீர்களா? உங்கள் ரசிகரின் மொழியைப் பாதுகாப்பதன் அர்த்தம் என்ன? உங்கள் அணுகுமுறை ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது," என்று அவர் X இல் பதிவிட்டு, திரு. ரெட்டியைக் குறியிட்டார்.
 

Leave a Reply