• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யால தேசிய பூங்காவின் குமண நுழைவாயில் இன்று திறப்பு

இலங்கை

2025 கதிர்காம யாத்திரை பருவத்திற்கான ஆயர்த்தமாக, யால தேசிய பூங்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குமண நுழைவாயில் இன்று (20) திறக்கப்பட உள்ளது.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புனித கதிர்காம தலத்திற்கு கால்நடையாகப் பயணிக்கும் இந்த யாத்திரை, இலங்கையில் மிக நீண்ட யாத்திரையாகக் கருதப்படுகிறது.

பக்தர்கள் கதிர்காமத்தை அடைய குமண மற்றும் யால தேசிய பூங்காக்களுக்கு இடையில் பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் வனவிலங்குகள் வசிக்கும் பகுதிகள் வழியாக 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கின்றனர்.

உகந்தையில் இருந்து யால வழியாக கதிர்காமம் வரையிலான யாத்திரையை எளிதாக்கும் வகையில் குமண நுழைவாயில் இரண்டு வாரங்களுக்கு திறந்திருக்கும் என்று தேசிய பூங்காவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத் திருவிழா ஜூன் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, பக்தர்கள் இந்த ஆன்மீக பயணத்தில் குமனா மற்றும் யால தேசிய பூங்காக்கள் வழியாக சுமார் ஐந்து முதல் ஆறு நாட்கள் பயணம் செய்வார்கள்.
 

Leave a Reply