இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகள்
இலங்கை
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக நாட்டுக்கு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு தூதரகம் சான்றளிக்கப்பட்ட கடிதத்தை வெளியிட்டுள்ளதாக தூதர் நிமல் பண்டார குறிப்பிட்டார்.
நேற்று (19) நான்கு பேர் இலங்கைக்கு புறப்படுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று (20) மற்றும் நாளை (21) இஸ்ரேலில் பொது விடுமுறை நாட்கள் என்றாலும், தூதரகம் திறந்திருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர், நான்கு நபர்களும் எல்லையைக் கடக்க அனுமதி பெறப்பட்டதாக அவர் கூறினார்.
வரும் நாட்களில் மேலும் பல இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தூதர் நிமல் பண்டாரா கூறினார்.
அனுமதி கடிதங்கள் தேவைப்படும் இலங்கையர்கள் தங்கள் கடவுச்சீட்டு மற்றும் விசாக்களுடன் தூதரகத்தைப் அணுகுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாக்களை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு எகிப்து வழியாக பயணிக்க 96 நாள் விசா வழங்கப்படும்.
இதற்காக 50 அமெரிக்க டொலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தூதர் நிமல் பண்டார தெரிவித்தார்.
























