• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தென்னிந்திய திரைப்படங்களில் கிடைத்த வாய்ப்புகளுக்காக என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்- ஜெனிலியா

நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இயக்குநர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு இந்தி படமான துஜே மேரி காசம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம் (2008), சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

இதேபோல், தெலுங்கில் பொம்மரில்லு (2006) படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான பில்ம்ஃபேர் விருது (தெலுங்கு) பெற்றார். இந்தியில், ஜானே து... யா ஜானே நா (2008) படத்தில் இம்ரான் கானுடன் நடித்து புகழ் பெற்றார்.

ஜெனிலியா உச்ச நடிகையாக இருந்தபோதே கடந்த 2012-ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரியான் மற்றும் ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு சுமார் 10 ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜெனிலியா, 2022-ல் தெலுங்கு படமொன்றில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

சமீபத்தில் சிதாரே சமீன் பர் (2024) என்ற இந்தி படத்தில் அமீர்கானுடன் நடித்தார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைத்ததா ? என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது அவர், " என்னுடைய தென்னிந்திய படங்களில் எனக்கு எப்போதும் சிறந்த கதாப்பாத்திரங்களே கொடுக்கப்பட்டுள்ளன. அங்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

நான் கற்றுக் கொண்ட இடம் அதுதான். ஐதராபாத்தில் ஹாசினி என்றும், தமிழில் ஹரிணி என்றும், மலையாளத்தில் ஆயிஷா என்றும் எனது கதாப்பாத்திரங்கள் வழியேதான் தென்னிந்திய மக்கள் என்னை நினைவில் வைத்திருக்கிறார்கள்" என்றார்.
 

Leave a Reply