• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கெஹெலியவின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் மூவர் கைது

இலங்கை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஏனைய இரண்டு மகள்கள் மற்றும் மருமகனை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று மூன்று நபர்களிடமிருந்தும் அவர்களின் சொத்துக்கள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகள் குறித்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

பின்னர் பணமோசடி குற்றச்சாட்டில் அவர்களைக் கைது செய்தது.

நேற்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கொழும்பு நீதிவான் தனுஜா லக்மாலி அவர்களை தலா 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 05 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 03 சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.

ஆனால் பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

எனினும், முன்னாள் அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் இன்று பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடிந்தது என்று கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சரின் நெருங்கிய உறவினர் மற்றும் அவரது குடும்பத்தினரால் பிணை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர், அவரது மனைவி மற்றும் மகள் நேற்று சிறைக்கு மாற்றப்பட்டதால்.

அவர்களின் பிணை தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
 

Leave a Reply