• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனவரி முதல் 73,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு

இலங்கை

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.

இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள்.

அவற்றின் எண்ணிக்கை 58,947 என DMT ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, 7,500 கார்கள் மற்றும் 1,666 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 

Leave a Reply