• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மேல்முறையீட்டு நீதிமன்றுக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இதேவேளை, மேல் நீதிமன்ற நீதிபதி தொன் பிரான்சிஸ் ஹத்துருசிங்க குணவர்தன மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய காந்த மத்தும படபெந்திகே ஆகியோர் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இன்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.
 

Leave a Reply