• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜாக் ஸ்பேரோ உடையில் மருத்துவமனைக்குள் நுழைந்த ஜானி டெப் - துள்ளி குதித்த குழந்தைகள்

சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானிடெப். இவர் 2003-ல் வெளியான தி பைரேட் ஆப் தி கரீபியன் படத்தில் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றன.

ஜானிடெப் தற்போது 'டே ட்ரிங்கர்' என்ற திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஸ்பெயினில் இப்படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஜாக் ஸ்பேரோ உடையில் ஜானிடெப் சென்றுள்ளார்.

மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பேசிஜானிடெப் விளையாடியுள்ளார். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 
 

Leave a Reply