விஜய் கோணேஸ்வரன் நன்கொடையால் நானுஓயா கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் புதிய கட்டடம் திறப்பு
கனடா
கடந்த வருடம் கனடாவில் 1 .1 மில்லியன் நன்கொடையை தொடர்ந்து
இன்று நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட ம/மா/கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில், புதிய வகுப்பறை கட்டடம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மலசல கூடம்... கூடங்கள், மின் இணைப்பு, வெளிச்ச வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவுசெய்யப்பட்டு, இவற்றின் திறப்பு விழா இன்று (17 june 2025) பாடசாலை அதிபர் திரு விஜயகுமார் மனோகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முழுமையான கட்டிடத் திட்டம், கனடாவைச் சேர்ந்த சமூக நல செயற்பாட்டாளரும், தமிழர் சமூகத்தின் ஒரு பிரமுகருமான திரு விஜய் கோணேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்ட 45 இலட்சம் ரூபாய் நன்கொடையினால் செயல்படுத்தப்பட்டது. மேலும், இந்நிகழ்வை முன்னிட்டு, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கணினிகள் மாணவர்களுக்காக பாடசாலைக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
திரு விஜய் கோணேஸ்வரன் மற்றும் அவரது கோணேஸ்வரன் குடும்பத்தினர், கடந்த ஆண்டு கனடாவின் ஸ்கார்பரோ மருத்துவமனை வலையமைப்புக்கு $500,000 மற்றும் தமிழ்ச் சமூக மையத்துக்கு $600,000 என மொத்தமாக 1.1 மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்.இத்தொடர்ச்சியான சமூக பங்களிப்பின் ஒரு பகுதியாகவே, தாயகத்திலும் கல்வித் துறையில் பல்வேறு நற்கட்டுமானங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
பாடசாலை அதிபர் திரு விஜயகுமார் மனோகரன் அவர்கள், மாணவர்களின் நிலை குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்ததில், “முந்தைய ஆண்டுகளில் வகுப்பறைகள் பற்றாக்குறை காரணமாக, கொட்டில் வகுப்பறைகளில் மாணவர்கள் கல்வி கற்றனர். கணினியை கைகளில் தொடவும் வாய்ப்பின்றி வளர்ந்து வரும் இம்மாணவர்களுக்கு, விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் கற்பித்தல் மிகவும் சவாலானதாக இருந்து வந்தது.
மேலும், நூலக வசதியின்மை கல்வித் தரத்தையும் பாதித்தது,” எனக் கூறினார்.திரு விஜய் கோணேஸ்வரன் அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பின் பின்னர், “பாடசாலையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் கனவுடன், ஆசிரியர் குழுவோடு நாங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம்” என்றும் அதிபர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், நுவரெலியா வலய மேலதிக கல்விப் பணிப்பாளர், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். தற்போது, 1ம் வகுப்பிலிருந்து 11ம் வகுப்பு வரை 612 மாணவர்கள் கல்வி பயிலும் இந்த பாடசாலைக்கு, போதிய அளவில் ஆசிரியர்களும், அவர்களுக்கான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது.
இப்பாடசாலையின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் அதிபர் தலைமையிலான குழுவினர் முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டு வருகின்றனர்.
Navajeevan Anantharaj






















