முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது
இலங்கை
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிதி மோசடி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, குறித்த மூவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியிருந்த வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.






















