• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹட்டன் குயில்வத்த பகுதியில், காரின் மீது முறிந்து விழுந்த மரம்

இலங்கை

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் குயில்வத்த பகுதியில், நேற்றிரவு 8 மணியளவில் கம்பஹாவிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற காரின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக குறித்த மரம் சரிந்து வீதியில் சென்றுக் கொண்டிருந்த கார் மீது விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இடம்பெற்ற வேளை காரில் சாரதி மட்டுமே இருந்ததாகவும்,விபத்தில் அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றாலும் காரின் பின்புறம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ,பொலிஸார் தெரிவித்தனர்.

மரம் விழுந்ததால் பிரதான வீதியில் போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து  வட்டவளை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் மரத்தை வெட்டி அகற்றிய பின்னர், வீதியின் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply