• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வைரலாகும் அருண் பாண்டியனின் 60வது கல்யாணவிழா கொண்டாட்ட கிளிக்ஸ்

சினிமா

தமிழ் சினிமாவில் உள்ள மூத்த நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன். 80 மற்றும் 90களில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார், 2000 களுக்குப் பின்னர் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல விலகினார்.

அதற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன் டிமான்ட்டி காலனி 2 படத்தில் நடித்து இருந்தார். தற்பொழுது அவரும் அவர் மகள் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடித்த அக்கேனம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி 60வது கல்யாண விழா கொண்டாடப் பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மாலையும் கழுத்துமாக அருண் பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா பாண்டியன் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

Leave a Reply