SK-24 அப்டேட் - குட் நைட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்
அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது 'குட் நைட்' படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.























