• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல் - புதிய ஏவுகணையை களமிறக்கிய ஈரான்

இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை தலைமையகம் மீது தாக்குதல்.. புதிய ஏவுகணையை களமிறக்கிய ஈரான்

ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த ஐந்து நாட்களாக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) டெல் அவிவ்வில் உள்ள இஸ்ரேலின் உள்நாட்டு ராணுவ உளவுத்துறை அமன் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறையான மொசாட் தலைமையகம் உட்பட ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகளையும் தாண்டி, அதிகாலை வேளையில் IRGC வெற்றிகரமான இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதல்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் அமன் தலைமையகத்தையும், மொசாட்டின் படுகொலை நடவடிக்கைகளை திட்டமிடும் மையத்தையும் குறிப்பாக குறிவைத்ததாக IRGC கூறியுள்ளது.
 

Leave a Reply