• Welcome to TamilsGuide
செய்திகள் 1

#Purivijaysethupathi படத்தில் இணைந்த வாத்தி பட நடிகை

சினிமா

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். .

இவர் இயக்கிய போக்கிரி, இட்லு ச்ரவனி சுப்ரமணியம்,அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

இவர் கடைசியாக டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் நடிகை தபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் இப்படத்தில் கன்னட முன்னணி நடிகரான துனியா விஜய் மற்றும் நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தம் ஆகியதை படக்குழு சில் வாரங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு நடிகை சம்யுக்தா படத்தில் இணைந்துள்ளதை படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.

சம்யுக்தா இதற்கு முன் தனுஷ் நடித்த வாத்தி மற்றும் விருபக்ஷா போன்ற வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply