கனடா மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய நிதி உதவித் திட்டம்
கனடா
கனடா மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய நிதி உதவித் திட்டம் Canada Disability Benefit (CDB) எனப்படும் புதிய நிதி உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூன் 20 முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இது கனடா அரசின் மாற்றுத்திறனாளி உள்ளடக்க செயற் திட்டத்தின் Disability Inclusion Action Plan திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது.
யார் தகுதியுடையவர்?
• 18 முதல் 64 வயதிற்குள் உள்ள மாற்றுத்திறனாளிகள்
• மாற்றுத்திறனாளி வரி Disability Tax Credit (DTC)-க்கு தகுதி பெற்றிருக்க வேண்டும்
கனடா மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய நிதி உதவித் திட்டம் ; தகுதியானவர்கள் யார் | Are You Eligible For The New Disability Benefit
• 2024 வருமானவரி அறிக்கையை கனடிய வருமான வரி முகவர் நிறுவனத்தில் Canada Revenue Agency தாக்கல் செய்திருக்க வேண்டும் (அல்லது அவருடைய துணைவி/துணைவர் செய்திருந்தால் போதுமானது)
அரசு தகுதியுள்ளவர்களுக்கு கடிதம் அனுப்பி, விண்ணப்பக்குறியீடு மற்றும் வழிமுறைகளுடன் விண்ணப்பிக்க அழைக்கும்.
கடிதம் பெறாதவர்களும் தங்களை தகுதியுடையவர்களாகக் கருதினால், தங்களது முகவரி மற்றும் 2024 வருமான அறிக்கையின் (Line 23600) நிகர வருமான விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
எப்படித் தவணை பெறுவது?
விண்ணப்பங்கள்:
• ஆன்லைனில்
• தொலைபேசி மூலம்
• அல்லது Service Canada அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
சமூக காப்பறுதி இலக்கம் Social Insurance Number (SIN) மற்றும் நேரடி வைப்பு direct deposit விபரங்கள் தேவைப்படும். Direct deposit-இல் பணம் விரைவாகவும் பாதுகாப்பாகவும் கிடைக்கும்.
சில பொது சேவை அமைப்புகள், விண்ணப்ப செயல்முறையில், குறிப்பாக DTC-க்கு விண்ணப்பிப்பதில் உதவிக் கொடுக்கின்றன. ஜூன் 30க்குள் விண்ணப்பம் செய்பவர்களுக்கு, ஜூலை மாதம் முதல் முதல் தவணை வழங்கப்படும்.
பெறும் தொகை:
• அதிகபட்சம் $2,400 ஆண்டு (அதாவது $200 மாதம்)
• ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரை வழங்கப்படும்
• விலை உயர்வுக்கு ஏற்ப வருடாந்தம் தொகை மாற்றப்படும், ஆனால் விலை குறைந்தாலும் தொகை குறையாது.
மேலும் விவரங்களுக்கு: www.canada.ca/disability-benefit
























