இஸ்ரேலுடன் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை - ஈரான் திட்டவட்டம்
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடியை கொடுத்த பின்னரே போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் முன்வரும் என்று கத்தார் மற்றும் ஓமன் நாடுகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. .























