தெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள்- அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க மறுப்பு - டிரம்ப் குற்றச்சாட்டு
இஸ்ரேலும் ஈரானும் இன்று ஐந்தாவது நாளாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானியர்களை தலைநகர் தெஹ்ரானில் இருந்து வெளியேறுமாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "அணு ஆயுத மேம்பாட்டை தடுப்பதற்காக நான் கையெழுத்திடச் சொன்ன 'ஒப்பந்தத்தில்' ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இதனால் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளது. ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது. நான் மீண்டும் மீண்டும் சொல்கிறன், அனைவரும் உடனடியாக தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே சமயம், ரஷியா ஈரானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது.ஈரானுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும், இஸ்ரேல் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் வலியுறுத்தியுள்ளார்.























