• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேலின் விமான நிலையங்களை முழுமையாக மூடுவதாக அறிவிப்பு

இஸ்ரேலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வான்வெளி மற்றும் விமான நிலையங்களை முழுமையாக மூடுவதாக அறிவித்தது.

ஈரானுடனான போர்பதற்றத்திற்கு மத்தியில், இஸ்ரேல் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மேற்கு ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்ததாக இன்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்த சில மணிநேரங்களிலேயே ஈரான் அதன் பழிலாங்கலை ஆரம்பித்தது.

ஈரானின் குறித்த தாக்குதலில், இஸ்ரேலின் தேசிய அவசர சேவை, வடக்கு இஸ்ரேலின் ஹைஃபாவில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தது.

அத்துடன், ஹைஃபாவில் எறிகணைகள் தரையிறங்கியதாகவும், அதன் தாக்கத்தில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியன.

இந்நிலையிலேயே, பாதுகாப்பு கருதி இஸ்ரேலிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், வான்வெளி மற்றும் விமான நிலையங்களை முழுமையாக மூடியுள்ளது. 
 

Leave a Reply