முகநூல் களியாட்டம் - பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் கைது
இலங்கை
பாணந்துறையில் நடைபெற்ற முகநூல் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை- மஹபெல்லான பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வின் போதே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அலுபோமுல்ல பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, 26 கைது செய்யப்பட்டதோடு, அவர்களில் 10 பேர் பல்கலைக்கழக மாணவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் அலுபோமுல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





















