• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் லிஃப்ட் இடிந்து விழுந்து பதின்ம வயது இளைஞன் பரிதாப மரணம் 

இலங்கை

கொழும்பு - மொரட்டுவ பகுதியில், லிஃப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார். 

மொரட்டுவ பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்தவர் 19 வயதுடைய இளைஞர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நான்கு மாடி ஹோட்டலின் மேல் தளத்திற்கு பாத்திரங்களை எடுத்துச் சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. 

மேல் மாடியில் இருந்து அவர் மீது லிஃப்ட் சரிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 
 

Leave a Reply