• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொரண்டோவில் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்ட பெண் கைது 

கனடா

கனடாவின் டொரண்டோவில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

நகரின் மிட்டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கத்தியால் காயப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை 2 மணி நேரத்திற்கு முன்பு, ரோஸ்லான் அவென்யூ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் 50 வயதுக்கும் மேற்பட்ட ஆண் ஒருவர் கத்தி குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் கிடப்பதனை அவதானித்துள்ளனர்.

குறித்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகத் தெரிவித்தள்ளது. குறித்த நபருக்கு உயிராபத்து கிடையாது என மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வயது முதிர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அவருடைய பெயரையும், சம்பவத்தின் காரணத்தையும் தற்போது வரை வெளியிடவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

Leave a Reply