• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆட்டம் முடிவுக்கு வருகிறது - ஸ்குவிட் கேம் 3 ஃபைனல் டிரெய்லர் ரிலீஸ்

சினிமா

கடந்த 2021 ஆம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்குவிட் கேம் தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குநர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார்.

தென் கொரிய நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கடன் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை முன்னிறுத்தி கடனில் மூழ்கிய மக்களின் பொருளாதார சூழலைப் பயன்படுத்தி ஆடும் விபரீத விளையாட்டு தான் இந்த ஸ்குவிட் கேம்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது.

இதனையடுத்து உருவான ஸ்குவிட் கேம் தொடரின் இரண்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன் நெட்பிளிக்சில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சீசன் 2 முடிவில் இதற்கான கடைசி சீசனை இந்தாண்டு வெளியிட இருப்பதாக தெரிவித்திருப்பர்.

அந்த வகையில் ஸ்குவிட் கேம் தொடரின் ஃபைனல் சீசன் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. தொடரின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. தற்பொழுது தொடரின் கடைசி டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கதாநாயகனின் மனிதத்தை பற்றி வசங்கள் அடங்கியுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இந்த தொடரின் மீது பல மடங்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 

Leave a Reply