ஜி.வி.பிரகாஷூக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குனர்
சினிமா
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் நேற்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷுக்கு 'சூரரைப் போற்று' படத்தின் 'மண்ணு உருண்டை மேல' பாடல் ரெகார்டிங் வீடியோவை பகிர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பல விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
























