அஸ்வெசும பணத்தை மோசடி செய்தவர் கைது
இலங்கை
அஸ்வெசும பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரதேச செயலக அதிகாரியொருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலொன்ன பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், 4.1 மில்லியன் ரூபா அஸ்வெசும பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதி குற்றப் பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.





















