• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்பு

இலங்கை

நீர்கொழும்பு போரதோட்டை கடற்கரையில் இன்று (14) காலை முச்சக்கர வண்டிக்குள் எரிந்த நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபர் நீர்கொழும்பு வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் சாரதியான, நீர்கொழும்பு தலுபத பகுதியைச் சேர்ந்த ஜயந்த புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கொச்சிக்கடை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து கொச்சிக்கடை பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து தற்போது எவ்விதமான தகவலும் வெளியாகவில்லை.

நீதவானின் விசாரணைக்குப் பிறகு, சடலம் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply