• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் பரபரப்பு - ஓடுபாதையை விட்டு விலகி புல்தரையில் சென்ற விமானம்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று மசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.

ஆனால் கட்டுப்பாட்டை விமானம் இழந்து ஓடுபாதையை விட்டு விலகி அங்கிருந்த புல்தரையில் சிறிது தூரம் ஓடியது. இதனையடுத்து அந்த விமானம் நிறுத்தப்பட்டது.

இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.

எனினும் இந்தச் சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரன்வேயை விட்டு விலகி புல்தரையில் ஓடி நின்ற விமானத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
 

Leave a Reply