பல்வேறு போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
இலங்கை
பேலியகொட பகுதியில் நேற்று (12) மாலை நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது 2.433 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 13.100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு அளவிடும் கருவியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
பேலியகொட பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 54 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.






















