• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

இலங்கை

நுவரெலியா ஹட்டன் பதுளை பிரதான வீதியில் சினிசிட்டா மைதானத்தின் முன் பகுதியில் மரம் முறிந்து மின் கம்பியில் விழுந்ததன் காரணமாக குறித்த பகுதியின் போக்குவரத்து ஒரு வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (13)அதிகாலை வீசிய கடும் காற்று காரணமாக நுவரெலியா – பதுளை வீதியில் உள்ள பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் தற்போது அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருகிறது.

ஆகவே, அப்பகுதியில் வாகன சாரதிகளும் அவதானத்துடன் வாகனத்தை செலுத்தும்படி பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, வீதியில் விழுந்த மரத்தினை அகற்ற பிரதேச வாசிகளும் பொலிஸ் அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply