• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

இலங்கை

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (13) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது மக்கள் அரசியல் தரப்புகளின் ஏற்பட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது போராட்டக்காரர்களால் பல்வேறு கோஷங்களும் எழுப்பப்பட்டன.

புற்றுநோய் பிரிவின் மீது முன்வைக்கப்படும் அழுத்தம் மற்றும் வைத்திய நிர்வாகியை மாற்றல் உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கோசங்கள் எழுப்பப்பட்டன.

எங்கள் வைத்தியசாலையை மீட்டு எடுப்போம், புற்று நோய் பிரிவை காப்பாற்றுவோம் என்பது பிரதான கோசமாக முன்வைக்கப்பட்டது.

மேலும், இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது. ஏழை மக்கள் இலவச சிகிச்ச பெறுகின்ற உரிமையை பாதுகாக்க வேண்டும்.

தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் போராட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் வைத்தியர்கள், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதிக்கு, புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பான மகஜர் ஒன்றை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மக்கள் சக்தி இளங்குமரனிடம் கையளிக்கப்பட்டது.
 

Leave a Reply