• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துருவ நட்சத்திரம் வெளியீட்டிற்கு பிறகே நான் என் அடுத்த பணியை தொடங்குவேன் - கவுதம் மேனன் உறுதி

சினிமா

நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி, தயாரித்த படம் 'துருவ நட்சத்திரம்'. முதலில் சூர்யாவை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை 2010 ஆம் ஆண்டு துவங்கினார் கௌதம் மேனன். ஆனால் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார்.

இக்கதையை கேட்ட விக்ரம் இப்படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இப்படம் துவங்கப்பட்டது. நிதி பிரச்சனை உட்பட பல பிரச்சனையின் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது.

பலமுறை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும், அந்த தேதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை. சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படத்தை இயக்கினார். இப்படத்தில் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து இருந்தார்.

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கவுதம் மேனன் துருவ நட்சத்திரம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் அதில் " துருவ நடசத்திரம் திரைப்படம் வெளியீட்டிற்கு பிறகு தான் நான் மற்ற வேலைகளை தொடங்க போகிறேன். நான் அடுத்து எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. திரைப்படத்தை முதலீட்டாளர்களிடம் காண்பித்தோம் அவர்களுக்கு பிடித்துள்ளது. படத்தின் மீதுள்ள சட்ட சிக்கல்களை தீர்த்து வருகிறோம். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக திரைப்படம் வெளியாகும்." என கூறியுள்ளார்.

இம்முறையாவது திரைப்படம் திரையரங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

Leave a Reply