• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய NPP

இலங்கை

பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி (NPP) ஹல்துமுல்ல பிரதேச சபையின் ஆட்சியை அமைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் ஜகத் குமார ராஜபக்ஷ 11 வாக்குகளைப் பெற்று அதன் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துணைத் தவிசாளர் பதவியை சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த ஆர். முருகேசன் பெற்றுள்ளார்.

2025 உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, ஹல்துமுல்ல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 09 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 06 இடங்களையும் பெற்றிருந்தன.

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலா 01 ஆசனங்களைப் பெற்றிருந்தன.

தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) மற்றும் மக்கள் கூட்டணி தலா 02 ஆசனங்களைப் பெற்றிருந்தன.
 

Leave a Reply